- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷை தினேஷ் என்பவர் கடத்தி வைத்திருக்கும் நிலையில், அவரிடம் இருந்து கிரிஷை காப்பாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார் முத்து. இதையடுத்து என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணிக்கு தெரிந்தவரான தினேஷ் என்பவர் கிரிஷை ஸ்கூலில் இருந்து கடத்தி சென்றதோடு, ரோகிணிக்கே போன் போட்டு 2 லட்சம் பணம் கேட்டு மிரட்டுகிறார். பணம் கொடுத்தால் தான் கிரிஷை விடுவிப்பேன் என்றும் கூறுகிறார். இந்த விவகாரத்தில் போலீசுக்கு செல்லலாம் என மீனா சொல்ல, அதெல்லாம் வேண்டாம் எனக் கூறும் ரோகிணி, என்ன ஆச்சுனே தெரியாம எதுக்கு போலீஸ் போகணும் என கூறுகிறார். அண்ணாமலையும் ரோகிணி சொல்வது சரி தான், முதலில் கிரிஷோட பாட்டியிடம் அவனைப்பற்றி விசாரிக்குமாறு மீனாவிடம் கூறுகிறார் அண்ணாமலை.
மீனா கொடுக்கும் ஐடியா
இதையடுத்து மீனாவை தனியாக மாடிக்கு அழைத்து செல்லும் ரோகிணி, கிரிஷை தனக்கு தெரிந்த தினேஷ் என்பவர் தான் கடத்தி வைத்திருக்கிறார் என்கிற விஷயத்தை போட்டுடைக்கிறார். அந்த தினேஷுக்கு தன்னைப்பற்றிய உண்மை எல்லாம் தெரியும் என்றும், அதைவைத்து மிரட்டுவதாகவும் கூறுகிறார் ரோகிணி. இந்த விஷயத்தில் அதிரடி முடிவெடுக்கும் மீனா, சரி நீ எல்லா உண்மையையும் சொல்லிடு என கூறுகிறார். ஆனால் ரோகிணி அதற்கு மறுக்க, பின்னர் வேறு பிளான் போடுகிறார். அந்த தினேஷிடம் மனோஜின் போன் நம்பரை கொடுத்து, பணத்தை கேட்க சொல்கிறார் மீனா. இதையடுத்து ரோகிணியும் தினேஷுக்கு மனோஜ் நம்பரை அனுப்பி பணம் கேட்க சொல்கிறார்.
எஸ்கேப் ஆகும் கடத்தல்காரர்கள்
பின்னர் தினேஷ் மனோஜுக்கு போன் போட்டு 2 லட்சம் கொடுத்தால் கிரிஷை விடுவிப்பதாக கூறுகிறார். இதைக்கேட்ட முத்து, எங்கு பணத்தை கொண்டு வர வேண்டும் என்பதை கேட்டு தெரிந்துகொண்டு, மனோஜை பாலோ பண்ணி செல்கிறார். அங்கு கடத்தல்காரர்கள் சொன்ன இடத்தில் பணத்தை வைத்துவிட்டு மனோஜ் செல்ல, அந்த பணப் பையை எடுக்க வந்த தினேஷ் மற்றும் இன்னொரு நபருடன் முத்து சண்டை போடுகிறார். அவர்கள் முத்துவிடம் இருந்து தப்பித்து ஓடிச் செல்கிறார்கள். அவர்களை முத்து துரத்தி சென்றும் ஜஸ்ட் மிஸ்ஸில் பைக்கில் தப்பித்து ஓடிவிடுகிறார்கள்.
கிரிஷை காப்பாற்ற செல்லும் அருண்
இதையடுத்து அந்த இடத்துக்கு பைக்கில் வருகிறார் அருண். அவரிடம் அந்த பைக்கில் செல்பவர்களை பிடிக்க சொல்கிறார் முத்து. அவர்கள் கிரிஷை கடத்திவிட்டார்கள், தயவு செஞ்சு போய் பிடி என கூறுகிறார் முத்து. இதையடுத்து அருணும் அந்த கடத்தல்காரர்களை பைக்கில் செஸ் பண்ணி செல்கிறார். இதையடுத்து என்ன ஆனது? அருண் கடத்தல்காரர்களை பிடித்தாரா? கிரிஷை தினேஷ் என்ன செய்தார்? இந்த விவகாரத்தில் ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் தினேஷ் சொல்லிவிடுவாரா? முத்துவின் அடுத்த நகர்வு என்ன? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

