- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
சிறகடிக்க ஆசை சீரியலில் கிரிஷ் பள்ளியில் இருந்து கடத்தப்பட்டுள்ள நிலையில், அதற்காக 2 லட்சம் கேட்டு ரோகிணியை மிரட்டுகிறார்கள். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில், கிரிஷை எப்படியாவது மனோஜ் உடன் நெருங்கி பழக வைக்க வேண்டும் என்று ரோகிணி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ஆபிஸில் இருக்கும் மனோஜிடம், சென்று பேசும் ரோகிணி, கிரிஷை ஸ்கூலில் சென்று அழைத்து வர வேண்டும் என சொல்கிறார். முதலில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் மனோஜ், பின்னர் ரோகிணி உடம்பில் கல்யாணி இறங்கிவிடுவாளோ என்கிற பயத்தில் பின்னர் சம்மதிக்கிறார் மனோஜ். இதையடுத்து கிரிஷை ஸ்கூலில் இருந்து அழைத்து வர மனோஜும், ரோகிணியும் ஸ்கூலுக்கு கிளம்பி செல்கிறார்கள்.
கிரிஷை கிட்னாப் பண்ணியது யார்?
ரோகிணி ஸ்கூலுக்கு சென்று பார்க்கையில் கிரிஷ் அங்கு இல்லை என்பதை அறிந்து ஷாக் ஆகிறார். பின்னர் அங்கிருக்கும் வாட்ச் மேனிடம் விசாரிக்கும்போது, கிரிஷ் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அவர் தான் காரில் அழைத்து சென்றதாகவும் சொல்ல, டென்ஷன் ஆகும் ரோகிணி, யார் வந்து கேட்டாலும் அனுப்பிவிடுவீர்களா என திட்டுகிறார். கிரிஷை ஸ்கூலில் வந்து கடத்தியது ரோகிணிக்கு தெரிந்த நபரான தினேஷ் தான். முதலில் அந்த நபருடன் கிரிஷ் செல்லமாட்டேன் என்று சொன்னாலும், பின்னர் ஐஸ்கிரீம் வாங்கித் தருவதாக கூறியது மட்டுமின்றி நான் உன் அம்மா ரோகிணியோட பிரெண்டு தான் என போட்டோவெல்லாம் காட்டி கிரிஷை நம்ப வைத்து கடத்திச் செல்கிறார்.
விஜயா மீது வரும் சந்தேகம்
இதையடுத்து வீட்டுக்கு வரும் ரோகிணி, கிரிஷ் கடத்தப்பட்ட விஷயத்தை அனைவரிடமும் சொல்கிறார். அப்போது முத்து, மீனா, அண்ணாமலை ஆகியோர் ஷாக் ஆக, விஜயா மட்டும் சந்தோஷப்படுகிறார். அப்பாடா ஒரு வழியா அவன் தொல்லை ஒழிஞ்சது என விஜயா நிம்மதி பெருமூச்சு விட, அவர் மீது முத்துவுக்கு டவுட் வருகிறது. ஏற்கனவே சிந்தாமணியை வைத்து கிரிஷை கடத்த முயன்றதை போல் நீங்கள் தான் இதை செய்திருப்பீர்கள் என முத்து சொல்ல, விஜயா பதறுகிறார். பின்னர் அண்ணாமலையிடம் சென்று நான் அப்படி செய்யவில்லை என கதறுகிறார். இதையடுத்து ரோகிணிக்கு ஒரு போன் வருகிறது.
கிரிஷுக்காக நடக்கும் பேரம்
ரோகிணியின் பரம எதிரி தினேஷ் தான் கிரிஷை கடத்தி வைத்து பணம் கேட்டு மிரட்டுவதற்காக ரோகிணிக்கு போன் போடுகிறார். அவர் கிரிஷ் தன்னுடைய கஷ்டடியில் இருப்பதாக கூறுவது மட்டுமின்றி 2 லட்சம் கொடுத்தால் தான் அவனை விடுவேன் என்றும் கூறுகிறார். இதனால் பதறிப்போகும் ரோகிணி, திடீர்னு இவ்வளவு பணம் கேட்டா எப்படி ரெடி பண்ணுவது என கேட்க, நீ பணத்தை கொடுக்காவிட்டால், உன்னைப் பற்றிய உண்மைகள் அனைத்தையும் சொல்லிவிடுவேன் என கூற, வேறுவழியின்றி அந்த பணத்தை தர சம்மதிக்கிறார் ரோகிணி. இதையடுத்து என்ன நடந்தது என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

