- Home
- Cinema
- தொலைக்காட்சி
- செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!
Pandian Refuses to listen Senthil Emotional : பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் செந்தில் - மீனா ஜோடி ஒரு பக்கம் நியாயமாகப் பேசினாலும், பாண்டியனின் அதீத வைராக்கியம் குடும்ப அமைதியைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Pandian refuses to listen Senthil emotional
பாண்டியன் மற்றும் செந்தில் இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு வருவது இயல்பு தான். இது அப்பா, மகனுக்கு இடையிலான பாசப்போராட்டமாக இருக்கலாம். இந்த வீட்டிலிருந்தால் தனது நிம்மதி போய்விடும் என்று கருதிய செந்தில் மனைவியுடன் தனிக்குடித்தனம் சென்றுவிட்டார். அப்பாவிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்தது, அரசு வேலைக்கு பணம் கட்டியது என்று அப்பாவின் கோபத்திற்கு ஆளானார். கடையிலும் நிம்மதி இல்லாத வாழ்க்கை. கட்டுன மனைவிக்கு ஆசைப்பட்டு எதுவும் வாங்கிக் கூட கொடுக்க முடியாது.
Pandian Stores 2 Latest Episode
இப்படி பல காரணங்களால் அவர் அரசு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் தான் இன்றைய எபிசோடில் பாண்டியன் மற்றும் செந்திலுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணன், சரவணன் வாழ்க்கை இப்படியானதற்கு அப்பாவும் ஒரு காராணம் என்று செந்தில் கடுமையான வார்த்தைகளால் குத்திக்காட்டினார். பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 669ஆவது எபிசோடில் செந்தில் அப்பா, நாம் முன்னெச்சரிக்கையாக அவர்கள் சொன்ன பொய்ய வச்சு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திடலாம். இல்லையென்றால் அவர்கள் கொடுத்துவிடுவார்கள் என்றார்.
Senthil Meena vs Pandian Fight
பதிலுக்கு அதெப்படி குடும்ப பிரச்சனைக்கு, அதுவும் தப்பு எல்லாத்தையும் அவர்கள் தான் செய்தார்கள். அப்புறம் எப்படி அவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போவாங்க என்றார். பின்னர் செந்தில் தான் திருமணம் செய்து கொண்டு வந்த போதும் சரி, ராஜீ திருமணமாகி வந்த போதும் சரி வாய்க்கு வந்ததெல்லாம் பேசினார். சாபம் கூட விட்டார். ஆனால், இப்போது என்ன செய்வார் என்று கேட்க, அதற்கு கோமதியும் சரி, மீனாவும் சரி அவரை சமாதானம் செய்து வைத்தனர்.
அப்போது ஏன், மீனா எதுவும் பொய் சொல்லியிருக்கலா சொல்லு அந்த பஞ்சாயத்தை இத்தோடு முடித்துவிடுவோம் என்று கோமதி கேட்க, அதெல்லாம் இல்லை. மீனா எதுக்கு என்னிடம் பொய் சொல்ல போறா என்றார். இதையடுத்து மேற்கொண்டு செந்திலை எதுவும் பேசவிடாமல் மீனா செந்திலை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். இது ஒரு புறம் இருக்க, தங்கமயில், மாணிக்கம் மற்றும் பாக்கியம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் காலையிலேயே நீ எதுக்கு அவங்க வீட்டுக்கு போன.
Pandian Stores 2 Serial Twist Tamil
நான் உன்னை எப்படி அந்த வீட்டில் வாழ வைக்கிறேன் என்று பாரு என்றார். அவர்கள் விவாகரத்து கேட்டால் உடனே கொடுத்துவிடுவோமா? அவர்களும் பொய் சொல்லி நம்மை ஏமாற்றி தான் திருமணம் செஞ்சாங்க. நான் என்ன அவ்வளவு பெரிய பொய்யா சொல்லிட்டேன். சின்னதா பொய்ய சொல்லி கல்யாணம் செஞ்சி வச்சேன். அவ்வளவு கஷ்டப்பட்டு அந்த வீட்டில் உன்னை கட்டிக் கொடுத்தது எதுக்கு தெரியுமா? நீ நல்லா வாழ வேண்டும் என்பதற்காகத்தான் என்று பேசிக்கொண்டார்கள்.
Saravanan Thangamayil Divorce Update
இன்னும் நகை மேட்டர் வெளியில் வரவில்லை. அப்படி வந்தால் அவ்வளவு தான் என்று தங்கமயில் தங்கை கூறினார். அப்போதுதான் தங்கமயில் மீனாவிற்கு போன் போட்டுக்கொண்டே இருந்தார். மீனா அவரது போனை எடுக்கவே இல்லை. தொடர்ந்து கட் பண்ணிக்கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் மீனா தங்கமயிலின் போனை அட்டெண்ட் செய்து பேசினார். என்ன மீனா, அவ்வளவு தான். நான் உண்மையில் உன் மீது பாசமாகத்தான் இருந்தேன். உன்னுடைய அக்காவா இருந்தால் நீயும் இப்படித்தான் செய்வீயா?
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
மாமா, என்னை விவாகரத்து செய்வேன் என்று சொல்கிறார், நீ ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? நான் என்ன அவ்வளவு பெரிய தப்பா செய்துவிட்டேன். ஆமா பொய் சொல்லி ஏமாத்துனேன் தான். ஆனால், உங்கள் மீது பாசமாகத்தான் இருந்தேன் என்று கூறி கதறி அழுதார். ஆனால், இதையெல்லாம் நீங்கள் என்னிடம் பேச வேண்டிய அவசியமே இல்லை. சரவணன் மாமாக்கிட்ட தான் பேச வேண்டும் என்றார். கடைசியாக பாண்டியன் கடைக்கு புறப்பட்டார். சரவணனையும் அழைத்தார். ஆனால், கதிர் வேண்டாம் என்று சொல்ல, அரசி அண்ணன் இருக்கட்டும். நான் வருகிறேன் அப்பா என்றார். கோமதியும் கடைக்கு போக வேணடாம் என்றார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.