லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "மாஸ்டர்". இந்த படத்தின் ஷூட்டிங் அனைத்தும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அதனால் இருதரப்பு ரசிகர்களும் படத்தை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் "மாஸ்டர்" திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் "மாஸ்டர்" திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி அன்று ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து கொரோனா பிரச்சனை விடாப்பிடியாக பரவி வருவதால், மேலும் அடுத்த மாதம் வரை ஊரடங்கு ஓய்வு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வப்போது 'மாஸ்டர்' பற்றி தொடர்ந்து அப்டேட்டுகளை கேட்டு வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர்  சேதுபதி. அதாவது இந்த படத்தில், தன்னுடைய கதாப்பாத்திரம் குறித்து முதல் முறையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த படத்தில் முழுக்க முழுக்க வெறித்தனமான வில்லனாக தான் நடித்துள்ளதாக கூறியுள்ளார். 

ஏற்கனவே இவர், வில்லனாக நடித்த பேட்ட, மற்றும் விக்ரம் வேதா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.