கடந்த ஆண்டு அதிக படங்களில் நடித்தது மட்டும் இன்றி அதிக வெற்றி படங்களை கொடுத்த நடிகர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தவர் நடிகர் விஜய் சேதுபதி.

அதே போல் இந்த ஆண்டும் இவர் கை வசம் அரை டஜன் படங்கள் உள்ளது. மேலும் தொடர்ந்து 'மாமனிதன், ''சூப்பர் டீலக்ஸ்', 'சிந்துபாத்', 'சயிர நரசிம்மரெட்டி', போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் 'ஸ்கெட்ச்' பட இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க விஜய்சேதுபதி கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தில் ஏற்கனவே நடிகை நிவேதா பேத்ராஜ் மற்றும் ராஷிகண்ணா ஆகிய  இருவரும் நாயகிகளாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்து எந்த உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த படத்தில் ராஷிகண்ணா நடிப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராஷிகண்ணா தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதன் மூலம் இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிகை ராஷி கண்ணாவுடன் டூயட் பாட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.