விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான அடுத்தப் படம் “புரியாத புதி” செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

விஜய் சேதுபதி, மாதவன் இணைந்து நடித்த் வெளிவந்த ‘விக்ரம் வேதா’ திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான தேதியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களில் ஒன்று ‘புரியாத புதிர்’.

இந்தப் படத்தின் ரிலீஸ் ஒருசில முறை தள்ளிப்போனாலும் கடைசியாக செப்டம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

“புரியாத புதிர்’ படத்தில் விஜய்சேதுபதியுடன், காயத்ரி, ரமேஷ் திலக், சோனியா தீப்தி, அர்ஜூனன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.

படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தின் டிரைலர் ரிலீசானபோது, சைக்கோ திரில்லர் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.