சிக்கலுக்கு மேல் சிக்கலை சந்தித்து வரும் விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’ படம் வரும் 28ம் தேதி ரிலீஸாவதும் சந்தேகம் தான் என்று சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி பயங்கர அப்செட் ஆகியுள்ளார்.

’சிந்துபாத்’ படத்தயாரிப்பாளரின் பழைய செட்டில்மெண்ட் பிரச்சினைகளை தொடர்ந்து ரிலீஸ் சிக்கல்களை சந்தித்துவந்தது. ஒருவழியாக  எல்லாப்பிரச்சினைகளும் முடிக்கப்பட்டு வரும் 28ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான், திடீரென டென்சனான  லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதிக்கு தனது நிலையை விளக்கி கோரிக்கை விடுத்திருந்தார். .அதில் ‘பெரிய படங்களை சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் சிறியவற்றை மூழ்கடிக்கின்றன. விஜய் சேதுபதி சிப்பாயாக எங்கள் சிறிய படத்தை காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே திட்டமிடப்பட்ட படங்களுக்கு நேரத்தை கொடுக்க தயாரிப்பாளர்களிடம் கூறுங்கள். தேதியை 15 நாட்களுக்கு முன்னால் அறிவிக்கவும்’ என கூறியிருந்தார்.

அவரது  ஆசை நிறைவேறும் வகையில் தற்போது ‘சிந்துபாத்’ ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.முதன்முறையாக அவர் மகன் சூர்யா இந்தப்படத்தில் நடித்திருக்கிறார். படம் நன்றாக வந்திருக்கிறது என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்தக் காரணங்களால் இப்பட வெளியீட்டை ஆர்வமாக எதிர்பார்த்திருந்தாராம்.அதன் காரணமாகவே, தயாரிப்பாளரின் சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு, ஒரு கோடி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.ஆனாலும் படம் ஜூன் 28 ஆம் தேதியும் வெளியாகாது என்பதால் கடும் வருத்தம் என்கிறார்கள்.