பிரபல காமெடி நடிகரும், தொகுப்பாளருமான லோகேஷ் பாப்புக்கு திடீர் என ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மூளை நெரம்பு பகுதி பாதிக்கப்பட்டதுடன்,  கை, கால் செயலிழந்து விட்டதாக அவருடைய நண்பர்கள் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்திருந்தனர்.

மேலும் அவரின் மருத்துவ செலவிற்காக  சமூக வலைத்தளம் மூலம் பணம் சேகரித்து வருவது போன்ற சில தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்களுக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ, அதே போல்... சின்னத்திரையில் நடிகர்களாகவும், தொகுப்பாளர்களாகவும், இருக்கும் பலருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அந்த வகையில், ஆத்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் லோகேஷ் பாப். விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த நானும் ரௌடிதான், ஜாம்பி,  உள்ளிட்ட சில படத்திலும் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

 இந்நிலையில் இவருக்கு திடீர் என கை - கால் செயலிழப்பு ஏற்பட்டதால் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருடைய மருத்துவ செலவிற்கு 7 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளத்தில் அவர் புகைப்படத்துடன் கூடிய செய்தியை வெளியிட்டு பண உதவி கேட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் இவருடைய ரசிகர்கள் சோகத்தில் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருந்த நிலையில் ஓய்வு கிடைத்த அடுத்த கணமே, நடிகர் விஜே.லோகேஷை சந்திப்பதற்கு மருத்துவமனைக்கே சென்றுள்ளார். அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்த பின், மருத்துவ செலவிற்கும் படம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி, லோகேஷ் பாப்பை சந்தித்த புகைப்படங்கள் மற்றும் சில வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.