சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி (vijay sethupathi) நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் (MaaManithan) படத்திற்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல்முறையாக இணைந்து இசையமைத்துள்ளனர். 

‘தர்மதுரை’ படத்தின் வெற்றிக்குப்பின் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் நான்காவது முறையாக இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் ‘மாமனிதன்’. இப்படத்தில் காயத்ரி கதாநாயகியாக நடித்துள்ளார். இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்த குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ளார். 

விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக இப்படத்தில் நடித்திருக்கிறார். தேனி, கேரளா போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள மாமனிதன் 2019 ஆம் ஆண்டே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது வரை ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இப்படத்திற்கு இளையராஜா-யுவன் ஷங்கர் ராஜா என இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இவர்கள் இருவரும் தனித்தனியாக விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பணியாற்ற வைத்த பெருமை விஜய் சேதுபதி மற்றும் சீனு ராமசாமியையே சேரும்.

மேலும் யுவன் சங்கர் ராஜா தான் இப்படத்தை தயாரித்தும் உள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், மாமனிதன் படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதில் அனைத்து மதங்களையும் மதித்து ஒற்றுமையுடன் வாழும் மாமனிதனாக காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

YouTube video player