Asianet News TamilAsianet News Tamil

’யாருக்கு ஓட்டுப் போட்டேன்’...ஓப்பனாக உண்மையைப் போட்டுடைத்த விஜய் சேதுபதி...

ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து  உரத்த குரல் எழுப்பி வந்த நடிகர் விஜய் சேதுபதி ‘நல்லது நடக்கும்னு நம்புறேன். அதுக்காக காத்துக்கிட்டிருக்கேன்’ என்று வாக்களித்த பின் வெளிப்படையாகப் பேட்டி அளித்தார்.

vijay sethupathi interview after voting
Author
Chennai, First Published Apr 18, 2019, 2:31 PM IST

ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக எட்டு வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்து  உரத்த குரல் எழுப்பி வந்த நடிகர் விஜய் சேதுபதி ‘நல்லது நடக்கும்னு நம்புறேன். அதுக்காக காத்துக்கிட்டிருக்கேன்’ என்று வாக்களித்த பின் வெளிப்படையாகப் பேட்டி அளித்தார்.vijay sethupathi interview after voting

கோடம்பாக்கம் கார்பரேஷன் காலனியில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில்  நண்பகல் 11:30மணியளவில் வாக்களித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,”முதன்முறையாக வாக்களித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஏனென்றால் அது பெருமைக்குரிய விஷயம்.

18 வருடம் நம் வீட்டில் முடிவெடுக்கவே, நம் வீட்டில் கேட்பாளர்களா என்று தெரியாது. ஆனால், நாட்டை யார் ஆளணும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்கள். நானும் வாக்களித்துவிட்டேன். அனைவரையும் போல நம்பிக்கையுடன் காத்துட்டு இருக்கேன். நல்லது நடக்கும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடக்கும் குழப்பம்  குறித்து வரும் வாட்ஸ்-அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். அதற்கு என்ன வழி என்று சொல்லத் தெரியவில்லை. அது இல்லாமல் இருந்தால் சந்தோஷம்.vijay sethupathi interview after voting

இந்த வருஷம் அதிகப்படியான வாக்குகள் பதிவாகும் என்று நம்புகிறேன். ஏனென்றால், மக்களிடையே அரசியல் பற்றி விழிப்புணர்வு அதிமாகியுள்ளது. ஒருவருக்கொருவர் அரசியலைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலமாக அரசியல் பற்றி அறிவை வளர்த்திருக்கிறார்கள். நான் அந்த விஷயத்தை அதிகமாகப் பாராட்டுகிறேன்" என்றார் விஜய் சேதுபதி.

Follow Us:
Download App:
  • android
  • ios