தமிழ் சினிமாவில் 'பாடகசாலை' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இனியா. இவர் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடித்து 2011 ஆம் ஆண்டு வெளியான 'வாகை சூட வா' திரைப்படம் தான் இவரை தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆக்கியது.

இதைத்தொடர்ந்து 'மௌனகுரு',  'அம்மாவின் கைபேசி' ,  'கண்பேசும் வார்த்தைகள்'  உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இப்படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

 

தற்போது தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் நடித்து வருகிறார்.  இந்நிலையில் இவர் புதிய ஆல்பம் பாடல் ஒன்றை தயாரித்து அதில் நடித்துள்ளார். 'வானத்தில் பறக்க சிறகுகள் கேட்கவா' என்று தொடங்கும் இந்த ஆல்பத்தில் இடம்பெற்ற பாடலுக்கு அஸ்வின் ஜான்சன் இசையமைத்துள்ளார். இந்த பாடலை கோவர்தன் பழனிசாமி எழுதியுள்ளார்.

இந்நிலையில் இந்த பாடலை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ப்ரமோட் செய்துள்ளார்.