மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஹீரோவாக மட்டுமே நடிக்காமல், அழுத்தமான வில்லன் வேடத்தில் நடித்து, மிரட்டி வருகிறார். அந்த வகையில் தளபதி விஜய்யுடன் இவர் நடித்துள்ள, 'மாஸ்டர்' திரைப்படம் அணைத்து பணிகளும், முடிவடைந்தும் கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது அனைவரும் அறிந்தது தான். இன்னும் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடியவில்லை என்றாலும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜூலை 8ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர். இதுகுறித்து விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் நாளை அதாவது ஜூலை 8ஆம் தேதி 5 மணிக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சன் டிவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி இந்த படத்தில் நடித்துள்ளார். மேலும் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 7ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.