படப்பிடிப்புக்கு ஒருநாள் ஒருபொழுது கூட தாமதமாக வராமல் இரண்டே மாதத்தில் தனது அடுத்த படத்தை முடித்துக்கொடுத்து இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.


படப்பிடிப்புக்கு ஒருநாள் ஒருபொழுது கூட தாமதமாக வராமல் இரண்டே மாதத்தில் தனது அடுத்த படத்தை முடித்துக்கொடுத்து இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் சபாஷ் பெற்றிருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கடந்த டிசம்பர் 14 ம் தேதியன்று தேனி,கம்பம் பகுதிகளில் துவங்கியது விஜசேதுபதியின் நடிப்பில் சீனு ராமசாமி நான்காவதாக இயக்கும் ‘மாமனிதன்’ படப்பிடிப்பு. 'தென்மேற்கு பருவக்காற்று’, ’தர்மதுரை’, ’இடம்பொருள் ஏவல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாமனிதன்.

இந்தப் படத்தில் காயத்ரி, லலிதா, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு இளையராஜாவும் அவருடைய வாரிசுகளான யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரித்துள்ளார்.

நேற்று இதன் இறுதிநாள் படப்பிடிப்பு முடிந்து பேக்-அப் ஆகியுள்ள நிலையில், இதை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கும் படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி, விரைவில் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும், தங்களது காட்சிகளுக்கு உயிர் கொடுக்கவுள்ள இளையராஜாவின் இசையைக் கேட்க ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.