பாலிவுட் விழாக்களில் செருப்பு போட்டுச் சென்றால் தப்பா... உருவக் கேலி குறித்து விஜய் சேதுபதி வேதனை

ரசிகர்களின் அன்பு எப்போதும் உண்மை என்று நம்புகிறேன். ரசிகர்களின் அன்பைப் பெறுவது ஒரு எனர்ஜி ட்ரிங்க் போன்றது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi expresses concerns over body shaming in Bollywood sgb

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டில் நுழைந்திருக்கிறார். கத்ரீனா கைப்புடன் நடித்துள்ள மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஷாரூக் கானின் ஜவான் படத்தில் நடித்து பாலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த விஜய் சேதுபதி, இப்போது மேரி கிறிஸ்மஸ் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கிறார். அவருடன் கத்ரீனா கைப்பும் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி, தனது தோற்றத்தை வைத்து உருவக் கேலி செய்வது அதிகம் எதிர்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். "இன்று நான் எங்கு சென்றாலும், என்னை ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஒரு வரம். நான் நானாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக எனது ரசிகர்களுக்கு நன்றி" எனக் கூறியுள்ளார்.

 

2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!

 

Vijay Sethupathi expresses concerns over body shaming in Bollywood sgb

“ரசிகர்களின் அன்பு எப்போதும் உண்மை என்று நம்புகிறேன். ரசிகர்களின் அன்பைப் பெறுவது ஒரு எனர்ஜி ட்ரிங்க் போன்றது. மக்கள் உங்களை நேசிக்கும்போது, உங்கள் பணியை அவர்கள் புரிந்துகொண்டார்கள். இது மிகவும் நம்பிக்கையை அளிக்கிறது. ரசிகர் மன்றங்களில் இருந்து நான் புரிந்துகொண்டது இதுதான். இது எப்போதும் எனக்கு ஆற்றலைத் தருகிறது" எனவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

பாலிவுட் அவர் நடித்த மும்பைகர் படத்தை பற்றிப் பேசியுள்ள விஜய் சேதுபதி, "நான் முதன்முதலில் மும்பைக்கு வரத் தொடங்கியபோது, சிலருக்குத்தான் என்னைத் தெரிந்திருந்தது. இப்போது நிறைய பேருக்கு என்னைத் தெரியும். அவர்கள் என்னிடம் பேச வருகிறார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. நான் சரியான திசையில் இருக்கிறேன் என்று உணர்கிறேன்" எனவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மேலும், பாலிவுட் விழாக்களில் எளிமையான உடைகளும் செருப்பும் அணிந்து வருவதால் நிறைய கிண்டல்களை எதிர்கொள்வதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும்: உலக வங்கி கணிப்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios