Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும்: உலக வங்கி கணிப்பு

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, வெளிநாட்டு முதலீடு உட்பட தனியார் துறையில் வளர்ச்சியைக் குறைக்கக்கூடும் என அறிக்கை எச்சரித்துள்ளது.

World Bank Leaves India GDP Growth Forecast Unchanged At 6.3% sgb
Author
First Published Jan 10, 2024, 4:48 PM IST

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகவே தொடரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி தனது உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் உள்ள கணிப்பின்படி, உலகின் மிக விரைவான வளர்ச்சி விகிதத்தை இந்தியா தக்கவைக்க உள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மாறாமல் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி படிப்படியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6.5% வரை இருக்கக்கூடும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தோஷங்களைப் போக்கி வீட்டில் அமைதியைக் கொண்டுவரும் கற்பூர வழிபாடு!

World Bank Leaves India GDP Growth Forecast Unchanged At 6.3% sgb

முதலீடு ஓரளவு குறைந்துவிட்டது. ஆனால் வருங்காலத்தில் முதலீடுகளின் வளர்ச்சி வலுவாக இருக்கும். இது அதிக பொது முதலீடு மற்றும் வங்கித் துறையின் ஆதரவுன் இந்த வளர்ச்சி நிலையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

தனிநபர் நுகர்வு வீழ்ச்சி வளர்ச்சியைக் குறைக்கும். தொடர்ச்சியான உணவு விலை பணவீக்கம் செலவினங்களைக் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களிடையே இதன் தாக்கம் காணப்படும். இதற்கிடையில், மத்திய அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப, அரசின் நுகர்வு மெதுவாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உட்பட பல தெற்காசிய நாடுகளில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்னிட்டு ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, வெளிநாட்டு முதலீடு உட்பட தனியார் துறையில் வளர்ச்சியைக் குறைக்கக்கூடும் என அறிக்கை எச்சரித்துள்ளது.

உலக அளவில் இறுக்கமான நிதிக் கொள்கை, நிதி நிலைமையில் உள்ள கட்டுப்பாட்டு மற்றும் பலவீனமான உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் காரணமாக இந்த ஆண்டு வளர்ச்சி 2.4 சதவீதம் பின்தங்கவும் வாய்ப்புள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.

2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!

Follow Us:
Download App:
  • android
  • ios