'அவெஞ்சர்ஸ்' சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் 'அவெஞ்சர்ஸ் என்ட் ஹோம்' என்கிற படம் இந்த மாத இறுதியில்  திரைக்கு வர உள்ளது. 

'அவெஞ்சர்ஸ்' சூப்பர் ஹீரோ ஹாலிவுட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த வரிசையில் 'அவெஞ்சர்ஸ் என்ட் ஹோம்' என்கிற படம் இந்த மாத இறுதியில் திரைக்கு வர உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள, இந்த படத்திற்கான பாடலை இசையமைப்பாளர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து பாடியுள்ளார். இந்தி பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரப்பரப்பை பெற்றது.

தமிழ் பாடல் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஆண்ட்ரியா, பாடலை எழுதிய விவேக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் பேசும் போது, எதிர்காலத்தில் இந்தியாவிலும் அவெஞ்சர்ஸ் மாதிரியான படங்கள் உருவாக வேண்டும் என கூறினார். 'அவெஞ்சர்ஸ்' படம் பற்றி தெரியாதவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு பாலமாக இருக்கும் என்றும், இதில்நடனம் ஆடி பாடியுள்ளதாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, 'அவெஞ்சர்ஸ்' படத்தில் அயன் மேனுக்கு தமிழில் குரல் கொடுத்தது மூலம் இந்த படத்தில் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு தமிழில் ஆண்ட்ரியா டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தமிழ்ப் பதிப்புக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.