Asianet News TamilAsianet News Tamil

இந்து கடவுள்கள் உடைமாற்றுவதை காட்டணும்... சர்ச்சையாக பேசிய விஜய்சேதுபதி மீது புகார்..!

இந்து கடவுள்கள் குளிப்பதை காட்டலாம் ஆடை மாற்றுவதை காட்டக்கூடாதா என சர்ச்சையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

Vijay sethupathi complained of controversy
Author
Tamil Nadu, First Published May 8, 2020, 5:12 PM IST

இந்து கடவுள்கள் குளிப்பதை காட்டலாம் ஆடை மாற்றுவதை காட்டக்கூடாதா என சர்ச்சையாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மகா சபை சார்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Vijay sethupathi complained of controversy

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், ‘’தற்போது சமூக வலைதளங்களில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் 17. 3 .2019 அன்று ஒளிபரப்பப்பட்ட நம்ம ஊரு ஹீரோ என்ற நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்து கோயில்களில் தெய்வங்களுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் அபிஷேகம் மற்றும் அலங்கார முறைகளை கொச்சைப்படுத்தும் விதமாக தெய்வங்கள் குளிப்பதை எல்லோருக்கும் காட்ட தெரிந்தவர்களுக்கு ஏன் தெய்வங்களுக்கு உடை மாற்றும் நிகழ்வை காட்டக்கூடாது என்று ஒரு சிறுமி தனது தாத்தாவிடம் கேட்டதைப் போல கற்பனை செய்து இந்து மதத்தையும் அதன் வழிபாட்டு முறைகளையும் மற்றும் இந்து கோயில்களில் நடக்கும் ஆகமவிதி நடைமுறைகளையும் கேவலப்படுத்தி பேசியுள்ளார்.Vijay sethupathi complained of controversy

இந்துக்களின் மனதில் அவநம்பிக்கையை வெளிப்படுத்துவதுடன், அந்த நிகழ்ச்சியின் நோக்கமே குறைந்த தண்ணீரில் குளிப்பது எப்படி? என்று காட்டுவதற்கான நிகழ்ச்சியாக அமையப்பெற்றுள்ளது. அதில் இந்து கோயில்களில் அபிஷேக அலங்கார முறைகளையும் பற்றி குறை பற்றி கூற காரணம் என்ன? இவர்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதம் தான் கிடைத்ததா? ஆகையால் அய்யா அவர்கள் விஜய் சேதுபதி மீது உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்துகளின் உறவுகளை மதித்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அகில இந்திய மகாசபை கேட்டுக்கொள்கிறது.

Vijay sethupathi complained of controversy

இதுபோன்று தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இந்து மதத்தினை கையிலெடுக்கும் திரைப்படத் துறையினர் மற்றும் பிற மதத்தவர்களுக்கு தங்களது நடவடிக்கை ஒரு பாடமாக அமைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்’’என புகார் அளித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios