புதிய படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகை அஞ்சலியை அழைத்துக் கொண்டு நடிகர் விஜய்சேதுபதி தாய்லாந்து பறந்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான செக்க சிவந்த வானம் மற்றும் 96 படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. இதனை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி எனும் திரைப்படம் வெளியாக உள்ளது. அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு சீதக்காதி தயாராக உள்ளது. இதே போல் ரஜினியுடன் பேட்ட படத்தின் படப்பிடிப்பையும் விஜய் சேதுபதி நிறைவு செய்துவிட்டார். 

இந்த நிலையில் அருண்குமார் இயக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் சேதுபதி தாய்லாந்து பறந்துள்ளார். அவருடன் படத்தின் நாயகி அஞ்சலியும் தாய்லாந்து சென்றுள்ளார். ஏற்கனவே விஜய் சேதுபதியும் அஞ்சலியும் இணைந்து நடித்த இறைவி படம் வெற்றி பெற்றது. அந்த படத்தில் விஜய் சேதுபதி – அஞ்சலி இடையிலான கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனது. 

இந்த நிலையில் தான் அருண்குமார் தனது படத்தில் விஜய் சேதுபதியையும் – அஞ்சலியையும் ஜோடியாக்கியுள்ளார். கிரைம் த்ரில்லர் ஜேனரில் உருவாகும் புதிய படத்திற்கு விரைவில் பெயர் சூட்டப்பட்டு பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளது. தாய்லாந்து சென்றுள்ள விஜய் சேதுபதியும் அஞ்சலியும் படப்பிடிப்பை முடித்துவிட்டு நவம்பர் கடைசியில் தான் சென்னை திரும்புகின்றனர். அதன் பிறகு பேட்ட படத்தின் டப்பிங் போர்சனை விஜய் சேதுபதி முடித்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது.