நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அவர் அடுத்ததாக நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது.
Vijay Sethupathi Next Movie : ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் எந்த ரோல் கொடுத்தாலும் அதில் பின்னி பெடலெடுப்பவர் விஜய் சேதுபதி. இவர் தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார். இடையே ரஜினி, விஜய், ஷாருக்கான் போன்ற நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்ததன் மூலம் பான் இந்தியா அளவில் அவர் ரீச் ஆனார். அதன்பின் இந்தியிலும் சில திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்தார்.
ஒரு கட்டத்தில் தொடர்ந்து வில்லன் வாய்ப்புகள் வந்ததால், உஷாரான விஜய் சேதுபதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன்பின்னர் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். அப்படி அவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மகாராஜா. நிதிலன் சுவாமிநாதன் இயக்கிய இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் ரிலீஸ் ஆகி அங்கும் 60 கோடிக்கு மேல் வசூல் வேட்டையாடியது.

மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி
மகாராஜா படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த விடுதலை 2 மற்றும் ஏஸ் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களும் அவருக்கு பெரியளவில் வெற்றியை தேடித் தரவில்லை. அதிலும் கடைசியாக வெளிவந்த ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அப்படத்தின் கதை நன்றாக இருந்தாலும், அதை பெரியளவில் புரமோட் செய்யாததால் அப்படம் வந்த சுவடே தெரியாமல் போனது. ஏஸ் படத்தின் தோல்வியால் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில், அவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி மகாராஜா என்கிற மாஸ் ஹிட் படத்தை இயக்கிய நித்திலன் உடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளாராம் விஜய் சேதுபதி. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மகாராஜா என்கிற மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்த இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ள தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. மகாராஜா மேஜிக் மீண்டும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
