விஜய் சேதுபதி, தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடித்து முடித்த பல படங்கள் அடுத்தடுத்து வெளியாக தயாராக உள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக... வெளியாக வேண்டி இருந்த படங்கள் தற்போது வரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது. 50 சதவீத திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் ரிலீஸ் ஆன படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. கொரோனா அச்சம் காரணமாக மக்களும் திரையரங்கிற்கு வருவதை தவிர்த்து வருகிறார்கள்.

எனினும் பொங்கல் திருவிழாவின் போது, வெளியாக உள்ள 'மாஸ்டர்' மற்றும் 'ஈஸ்வரன்' படத்தை தொடர்ந்து, ரிலீஸுக்கு தயாராக உள்ள மற்ற நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு கோவிந்து வசந்தா இசையமைத்துள்ளார். டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசரே அட்டகாசமாக இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்க்கும் அதிகரித்துள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் இணைந்து நடித்துள்ள காட்சிகள்,  ’நமக்கு தெரியாத ஒருத்தன், ஆனா நம்ம விஷயத்தை எல்லாம் தெரிஞ்ச ஒருத்தன், யார் அந்த நாலாவது ஆள்? என்று பார்த்திபன் கேப்பது விஜய் சேதுபதி குறித்து அவரிடமே கேட்கும் காட்சியும் அட்டகாசமாக உள்ளது. இறுதியில் விஜய் சேதுபதி ’எப்படி என்றாலும் என்னை நீங்கள் சும்மா விடப்போவதில்லை, அதனால் நானும் உங்களை சும்மா விட மாட்டேன். வாங்க நேரடியாக மோதி பார்க்கலாம்’  என்று பஞ்ச் பேசுவது வேற லெவல்.

தற்போது வெளியாகியுள்ள இந்த படத்தின் டீசர் இதோ..