தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய் சேதுபதி பிரபல நடிகை ஒருவருக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிப்பதை விட வித்தியாசமான கதைகள் மற்றும் குணசித்திர வேடமாக இருந்தாலும், அதனை தைரியமாக எடுத்து நடிப்பவர், விஜய் சேதுபதி.  இதனாலேயே இவருடைய படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விஜய் சேதுபதி தெலுங்கில் 'உப்பனா' என்ற படத்தில் பிரபல நடிகை கிருத்தி ஷெட்டிக்கு அப்பாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  இவர் ஏற்கனவே, அழகர்சாமியின் குதிரை, பாண்டியநாடு,  சினேகாவின் காதலர்கள், போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.