தமிழக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான, சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைவரும் தவறாமல் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளம்பரம் படம் ஒன்றில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய்சேதுபதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கியுள்ளார். இந்த விளம்பர படத்தில் விஜய்சேதுபதி கூறியதாவது:

நம்மை ஆளப்போவது யார்? யாரிடம் ஆட்சியை கொடுக்க வேண்டும்? அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது? இதுவரை அவர்கள் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள்? இவற்றை அலசி ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும். ஓட்டு போடும் முன் தெளிவாக சிந்தித்து நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்கள், முக்கியமாக ஓட்டு போடாமல் இருந்து விடாதீர்கள் என்று கூறியுள்ளார். இதே விளம்பரப்படத்தில் நடிகர் விவேக்கும் ஓட்டு போடுவதன் அவசியத்தை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

விஜய்சேதுபதி தோன்றும் இந்த தேர்தல் ஆணையத்தின் விளம்பர படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.