சமீப காலமாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்று வருகிறது.  அந்த வகையில் எடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படம், சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை படம், மற்றும்  குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகிய வீரர் வீராங்கனைகள், படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

இதைத் தொடர்ந்து தற்போது பிரபல இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர், முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். எனவே இந்த படத்திற்கு '800 ' என்கிற டைட்டில் வைக்கப்பட உள்ளதாகவும் ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் பற்றியும் படக்குழுவினர் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.