vijay said i felt fiar for this actress
தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங் கொடுக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரைப் போய் எந்த நடிகை மிரள வைத்திருப்பார் என பலரும் யோசிக்கலாம்.
ஆமாம்... இவரே நடிகை சிம்ரனின் நடனத் திறமையைப் பார்த்து மிரண்டுள்ளதாக கடந்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார் .

விஜய் நடித்த யூத் படத்தில் 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு அவருடன் செம குத்து குத்தியிருப்பர் சிம்ரன். இந்தப் பாடலுக்கு முதலில் இவருடன் தான் ஆடப்போகிறோம் என்பது விஜய்க்கே தெரியாதாம். ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போனதும் தான் தெரிய வந்ததாம்.
எப்போதுமே நடனக் காட்சிகளைப் பார்த்து விட்டு அசால்டாக நடனமாடிவிட்டு போகும் விஜய் இந்தப் பாடலுக்கு சிம்ரனுடன் ஆட சற்று பயந்ததாகவும், சிம்ரன் நடனத்தால் தன்னை மிரள வைத்தார் என்றும் கூறியுள்ளார்.
