தளபதி விஜய் நடித்து வரும் 63 வது படத்தின் ஷூட்டிங், தற்போது சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனால் விஜயை பார்க்க அவரது ரசிகர்கள் பலர், ஷூட்டிங் ஸ்பாட்டில் குவிந்து வருகின்றனர்.

ரசிகர்களின் ஆசையை நிறைவு செய்யும் விதத்தில், விஜயும் ஷூட்டிங் செல்வதற்கு முன்பும், பின்பும், ரசிகர்களுக்கு கையசைத்தும், வணக்கம் தெரிவித்தும், அவர்களுடைய அன்பை ஏற்றுக்கொள்கிறார். இது குறித்த வீடியோக்கள் நாள் தோறும் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் விஜயை காண ரசிகர்கள் முண்டியடித்து தடுப்பு வேலியை தாண்டுவதற்கு முயற்சித்த போது,  வேலி சரிந்து விழுந்தது. அதில் ரசிகர்கள் சிலர், ஒருவர் பின் ஒருவர் விழுந்தனர். அதை பார்த்த விஜய் உடனே ஓடி சென்று அந்த வேலியை பிடித்துள்ளார். மேலும் 63  படத்தின் படக்குழுவினர் சிலரும், ஓடி சென்று சரிந்து விழுந்த வெளியை தாங்கி பிடித்தனர். 

அந்த வீடியோ இதோ...