(இளைய) தளபதி விஜய்க்கு இரண்டு பழக்கங்கள்! தன் புதுப்படத்தின் எல்லா பணிகளும் முடிந்து, ரிலீஸாவதற்கு  சற்று முன் வேளாங்கன்னி தேவாலயத்துக்கு  சென்று ஸ்பெஷல் பிரேயர் நடத்திவிட்டு வருவார். அடுத்து, படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாளோ அல்லது ரிலீஸான சில நாளிலோ ஃபாரீன் டூர் கிளம்பிவிடுவார். 

இப்போது சர்கார் ரிலீஸாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் இந்த ரெண்டு சம்பிரதாயங்களுக்கும் தயாராகிவிட்டார் விஜய், ஆனால் அதேவேளையில் ‘சர்கார் படத்தின் கதை திருடப்பட்ட ஒன்று’ எனும் விமர்சனம் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை பற்றி அவர் அலட்டிக் கொள்ளவேயில்லை! என்பதுதான் இதில் ஷாக் ஹைலைட்டே. 


சர்கார் பட இசை ஆல்ப வெளியீட்டு விழாவின் மேடையில் ‘நான் முதல்வரானால்!’ என்று புதிர் போட்டவர், லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பேன் என்றார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 

இந்நிலையில்தான் அடுத்த சில தினங்களிலேயே சர்கார் படத்தின் கதையானது, வருண் ராஜேந்திரன் எனும் புது இயக்குநரின் ‘செங்கோல்’ எனும் திரைக்கதை! என்றும், கடந்த 2007ம் வருஷத்திலேயே அவர் அதை சங்கத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறார்! என்பதெல்லாம் சங்க தலைவர் கே.பாக்யராஜின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாகவே வெளியானது. 

ஏ.ஆர்.முருகதாஸ் எவ்வளவோ மறுப்பு கூறியும் இதை யாரும் ஏற்க தயாரில்லை. பாக்யராஜ் உள்ளிட்ட அச்சங்க நிர்வாகிகள் ‘எங்களின் முடிவு அதிர்ச்சி மற்றும் சர்ச்சையை கிளப்பலாம். ஆனால் அந்த முடிவில் தர்மம் இருக்கிறது.’ என்று கூறியுள்ளது, ஒட்டுமொத்தமாக சர்கார் படத்தின் கெத்தை சரித்து சிதைத்துவிட்டது. 

‘என்னவோ முதல்வரானா ஊழலை ஒழிப்பேன்னு சொல்றாரே விஜய்! அரசியல்வாதி அடிக்கிற கொள்ளை மட்டுமா ஊழல், இதோ இவர் படத்தோட இயக்குநர் பண்ணியிருக்கிறதும் ஊழல்தான். அதுவும் அடுத்தவனோட படைப்பை திருடி, புகழும் பணமும் சம்பாதிக்கிறது கொலைக்கு சமம். 

ஊழலை ஒழிப்பேன்னு சொல்ற விஜய் இதை ஏன் தட்டிக் கேட்க மாட்டேங்கிறார்? முருகதாஸ் விஷயத்தை பற்றி ஏன் வாய் திறக்கமாட்டேங்கிறார்? அப்போ இவரோட பருப்பெல்லாம் முருகதாஸ் மாதிரி பணக்கார இயக்குநர்கள் கிட்ட வேகாது போலிருக்கு!  

விஜய்யின் மெளனம் ஒரு ஊழலை, திருட்டை ஆதரிக்குது. இதுக்குப் பின்னாடி புரளும் பல கோடிகள் அவரது கண்ணை மறைக்குது.” என்றெல்லாம் போட்டுப் பொளந்து கொண்டிருக்கிறார்கள் இணைய தளத்தில். ஆனால் இவை எதற்கும் அலட்டிக் கொள்ளவேயில்லை விஜய். 

இதோ ஃபாரீன் டூர் போவதற்கு டிக்கெட் முதல் எல்லாமே அவருக்கு ரெடியாகிவிட்டது! என்று அவரது மன்றத்தின் தலைமை நிர்வாகிகளிடமிருந்தே தகவல் வருகிறது. இதில் பெரிய பியூட்டி என்னவென்றால், ஃபாரீன் டூர் முடிந்து சென்னை திரும்பிய பின் அட்லீயுடன் தனது அடுத்த புதிய பட ஷூட்டிங்கில்  கால் வைக்கிறார் விஜய். 

அந்த அட்லீ எப்படியாம்? முருகதாஸாவது கதையைதான் சுட்டார் என்று தொடர்ந்து புகார். ஆனால் அட்லீயோ திரைக்கதை, சீன்ஸ் எல்லாத்தையுமே சுடுவார்! என்று பெரும் பெயர் பெற்றவர்! என்பவர்கள் அதை இப்படி விளக்கியும் காட்டுகிறார்கள்...
ராஜாராணி - மெளனராகம்
தெறி    -    சத்ரியன் 
மெர்சல் -    மூன்று முகம் (சீன்களில் ஹாலிவுட்                     உள்ளிட்ட இ    ன்னும் சில படங்களும்                 அடக்கம்)
விஜய்யுடன் இவரது அடுத்தப் படம் எந்தப் படத்தின் ரீமேக்கோ?!
அவ்வ்வ்...