லேட்டாக நிதி உதவிகளை அறிவித்தாலும், லேட்டஸ்டா செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளவர் தளபதி விஜய். ஆனால் இதை கூட பிளான் போட்டு தான் செய்திருக்கிறாரா என்கிற சந்தேகத்தை வர வைத்துள்ளது 5 லட்சம் அதிகமாக கொடுத்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால்... பாதிக்கப்பட்ட திரையுலகை சேர்ந்த பணியாளர்களுக்கும், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கும், பிரபலங்கள் பலர் தொடர்ந்து பாரத பிரதமர் மோடியின் நிவாரண நிதிக்கும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே, பாலிவுட், டோலிவுட், கோலிவுட் நடிகர் - நடிகைகள், உதவி வரும் நிலையில் தளபதி விஜய் இன்று ரூபாய் 1 . 3 கோடியை நிதி உதவியை அறிவித்தார்.

அந்த வகையில், பாரத பிரதமர் நிவாரண நிதிக்கு ரூபாய் 25 லட்சம், தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் : 50 லட்சம், கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10 லட்சம், பெப்சி அமைப்பிற்கு ரூபாய் 25 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா  முதலமைச்சர் நிதிக்கு தலா ரூபாய் 5  லட்சம் , மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சமும் வழங்கியுள்ளார்.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தான், தல அஜித் ரூபாய் 1 .25 கோடி நிதி உதவியை அறிவித்தார். அவரை அடுத்து விஜய் ஏன் இன்னும் நிதி உதவிகளை அறிவிக்கவில்லை என்கிற பேச்சு அதிகமாகவே அடிபட்டு வந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தற்போது விஜய் நிதி உதவியை அறிவித்துள்ளார்.

மேலும் அடிக்கடி அஜித் - விஜய் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் முட்டி கொண்டு வரும் நிலையில், அப்போது இன்னும் விஜய் நிதி வழங்காதது பற்றி அஜித் ரசிகர்கள் விமர்சித்தது அனைவரும் அறிந்தது தான்.

அஜித்தை விட, குறைவாக நிதி வழங்கினால் இது தான் சாக்கு என அஜித் ரசிகர்கள் மற்றொரு பிரச்னையை உருவாக்கி, தன்னுடைய ரசிகர்களிடம் வம்பிழுக்க வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து, தற்போது விஜய் பிளான் போட்டு தான் ரூபாய் 5 லட்சம் அதிகமாகவே  நிதி வழங்கியுள்ளாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது?

பொதுவாக எது செய்தாலும் அதனை வெளியில் பெரிதாக காட்டிக்கொள்ளாமல் இருக்கும் அஜித் - விஜய் ஆகிய இருவருமே, மறைமுகமாக மக்களுக்கு இன்னும் சில உதவிகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.