இளையதளபதி விஜய் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக பிரபல தொலைக்காட்சி நடிகர் விஜயை அழைத்து கௌதவித்தது.
இந்த விழாவில் விஜயின் தீவிர ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர், அவர்கள் விஜயிடம் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது காணொளி மூலம் நடிகர் ஜெயம் ரவி, விஜயிடம் நீங்கள் மட்டும் எப்படி நடிப்பு, நடனம், சண்டை என அனைத்திலும் காமெடி சென்ஸ் உடன் செய்கிறீர்கள், பார்க்கவே வியப்பாக உள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த விஜய் தனக்கு சிறு வயதில் இருந்தே செந்தில் மற்றும் கவுண்டமணி காமெடி மிகவும் பிடிக்கும் என்றும் அவர்கள் தான் தன்னுடைய காமெடி சென்ஸ்க்கு காரணம் என தெரிவித்துள்ளார்.
