vijay next movie title leaked
நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'மெர்சல்' திரைப்படம் தற்போது வரை ரசிகர்களின் மாஸ் வரவேற்போடு, ஒரு சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. இந்தப் படம் ஆரம்பத்தில் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் அனைத்தையும் ப்ரோமோசன் ஆக்கி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல லாபத்தை பெற்றுத் தந்தது.
தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து நடிக்க உள்ளார். இந்தப் படம் சமூகக் கருத்தை வலியுறுத்தும் விதத்தில் எடுக்கப்பட உள்ளததாக ஏற்கனவே தகவல் வெளியானது.

தற்போது இந்தப் படத்தின் தலைப்பு என விவசாயிகள் உபயோகப்படுத்தும் 'கலப்பை' என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறி ஒரு பெயர் உலா வருகிறது.
விஜய் துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்து வருவதால், இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
