விஜயை வைத்து துப்பாக்கி, கத்தி என இரண்டு மாபெரும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் இன்று வரை நிறைய வரவேற்பு உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதன் காரணமாகவே மீண்டும் விஜய் மற்றும் ஏ .ஆர்.முருகதாஸ் இணைத்து மீண்டும் படம் பண்ண வேண்டும் என நீண்ட நாட்களாக ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனால் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 61வது படம் முடிந்த பிறகு 62வைத்து படத்தை முருகதாஸ் இயக்குவதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் இவருக்கு ஜோடியாக லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை சோனாக்க்ஷி சின்ஹா நடிப்பதாகவும் கூறப்பட்டது .

இது குறித்து தற்போது பதில் அளித்துள்ள முருகதாஸ் அடுத்ததாக விஜய் படத்தை இயக்க போவதாக வெளிவந்த தகவல் உண்மை தான் என்றும் , ஆனால் மற்ற நடிகர் நடிகர்கள் குறித்து இதுவரை எதுவும் முடிவெடுக்க வில்லை என கூறியுள்ளார்.