Vijay murugadoss film story line leaked

கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கிற படம் என்றால் அது விஜய் 62 என்று தான் சொல்லணும் காரணம் இந்த கூட்டணிக்கு இது மூன்றாவது படம் இதனால் மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. அதோடு கடந்த இரண்டு படங்களும் நூறு கோடி வசூல் மழை பொழிந்த படங்கள் வேறு அதோடு இந்த கூட்டணி சேர்ந்தாலே சோசியல் மெசஜ் கதையாக தான் இருக்கும் இதனால் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

தளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி என்றாலே எதாவது ஒரு முக்கிய சமுக பிரச்சனையை கையில் எடுத்து வெற்றி பெறுவார்கள். இவர்களது கூட்டணியில் வெளியான முதல் படமான துப்பாக்கி படத்தில் 'ஸ்லீப்பர் செல்' தீவிரவாதிகள் பற்றி கூறினார்கள். முதல் படம் வெற்றி பெஎடுத்து அதிலும் வெற்றி கண்டனர். முதல் இரண்டு படங்களும் விஜயை வேறு இடத்திற்கு எடுத்து சென்றதால் அடுத்து இவர்களது கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த படத்தில் என்ன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள் என்பது அரசால் புரசலாக தெரிய வந்துள்ளது.

விஜய்யின் புதிய படமும் மக்கள் பிரச்சினையை சொல்லும் சமூக அக்கறை கொண்ட படமாக உருவாக இருக்கிறது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இடம் பெற இருப்பதாக கூறப்படுகிறது. விவசாயிகள் எப்படி புறக்கணிக்கப்படுகிறார்கள்? விவசாயத்தை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றிய கருத்துக்கள் புதிய படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். ஒருவர் விவசாயி. மற்றவர் மாற்றுத்திறனாளி என்று சொல்லப்படுகிறது. இது விவசாயத்துக்கு குரல் கொடுக்கும் இளைஞனின் கதையாக உருவாகிறது. அதுமட்டுமல்லாமல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து இப்படத்தின் கதைக்களம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.