அட்லி, விஜய், நயன்தாரா கூட்டணியின் ‘பிகில்’படம் தீபாவளிக்கு வருவதில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் அதை தீபாவளி அன்று ரிலீஸ் செய்வதா அல்லது மூன்று நாட்கள் முன்னரே ரிலீஸ் செய்வதா என்பதில் தயாரிப்பாளர் பெரும் குழப்பத்தில் இருந்தததாகவும், வழக்கமாக பட ரிலீஸ் பஞ்சாயத்தில் தலையிட விரும்பாத விஜய் இம்முறை தயாரிப்பாளரை அழைத்து ரிலீஸ் குறித்து யோசனை சொன்னதாகவும் தெரிகிறது.

இந்த ஆண்டின் தீபாவளி சரியாக ஞாயிறன்று அக்டோபர் 27ம் தேதி வருகிறது. வழக்கமாக சினிமா வசூல் வெள்ள், சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும் நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் பண்டிகை தேதிகள் ஞாயிறன்று விழுந்தால் படங்களை வெள்ளியன்றோ அல்லது அதற்கும் முன்னதாக வியாழன்றே கூட ரிலீஸ் செய்வதுதான் சினிமா வழக்கம். ஆனால் இம்முறை விஜய் படத்துடன் கார்த்தியின் ‘கைதி’படமும் ரிலீஸாவதால் அதனுடன் படத்தை ஒப்பிட்டுப்பேசக்கூடாது என்பதற்காகவே ஞாயிறன்றுதான் ரிலீஸ் செய்யப்போவதாக விநியோகஸ்தர் வட்டாரத்தில் ‘பிகில்’தயாரிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தீபாவளிக்கு முந்தைய மூன்று நாள் வசூலை எந்த காரணத்துக்காகவும் இழக்கக்கூடாது. ‘கைதி’படத்துடன் ‘பிகில்’ஒப்பிடப்பட்டு படம் சுமார் என்று வந்தாலும் அந்த மூன்று நாட்கள் வசூல்படத்தைக் காப்பாற்றிவிடும் என்று தெரிவித்துள்ளனர். இந்தப் பஞ்சாயத்து நடிகர் விஜய் காதுக்கும் செல்லவே விநியோகஸ்தர்கள் நம் அளவுக்கு படத்தின் வசூலில் அக்கறையுள்ளவர்கள். எனவே அவர்கள் விருப்பப்படி அக்டோபர்24ம் தேதி வியாழன்றே ரிலீஸ் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவித்திருக்கிறாராம். ஸோ படம் 24ம் தேதியே ரிலீஸ் என்கிற அறிவிப்பு மிக விரைவில் வெளிவரக்கூடும்.