Asianet News TamilAsianet News Tamil

கையில் கட்டோடு 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய் பட நடிகை! வைரலாகும் வீடியோ...

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு விஜய் பட நாயகி, ஜெனிலியா கணவர் மற்றும் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.
 

vijay movie actress dance for vathi comming song viral video
Author
Chennai, First Published Mar 13, 2021, 3:35 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு விஜய் பட நாயகி, ஜெனிலியா கணவர் மற்றும் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்டுள்ள வீடியோ வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

மேலும் செய்திகள்: 'கோவில் அடிமை நிறுத்து' ஈஷா ஜக்கி வாசுதேவை பேட்டி எடுத்த நடிகர் சந்தானம்!
 

'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் முன்பே, இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம்ம ரீச் ஆனது. குறிப்பாக குட்டி ஸ்டோரி மற்றும் வாத்தி கம்மிங் பாடலுக்கு, ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் நடனமாடி தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வந்தது.

vijay movie actress dance for vathi comming song viral video

இதை அடுத்து தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் 'மாஸ்டர்' படத்தின் பாடலுக்கு, நடிகை நடிகை ஜெனிலியா,  கையில் கட்டுடன் கணவருடன் சேர்ந்து ஆட்டம் போட்டு அசரவைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: இதுக்கு டவலை கட்டிக்கிட்டு போஸ் கொடுத்திருக்கலாம்! கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் அதுல்யா!
 

vijay movie actress dance for vathi comming song viral video

சமீபத்தில், தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து ஸ்கேட்டிங் செய்ய கற்று கொண்டபோது, எதிர்பாராத விதமாக கீழே விருந்து இவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை வீடியோவாக இவர் வெளியிட்டிருந்தார். இதை தொடர்ந்து, கையில் வலி இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

 

Follow Us:
Download App:
  • android
  • ios