சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் விஜய், படப்பிடிப்புக்கு மத்தியிலும் ரசிகர்களைச் சந்தித்து குஷி படுத்தியிருக்கிறார்.

கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி திரைப்படம் சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுமென  அறிவித்திருந்தது. தயாரிப்பாளர்கள் ஒருமனதாக எடுத்துக்கொண்ட முடிவுக்குச் சம்மதம் தெரிவித்து அஜித்தும் தனது  “விஸ்வாசம்” படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்தார்.

அதுமட்டுமல்ல தயாரிப்பாளர் சிறப்பு அனுமதி கேட்டும் அஜித் அதற்க்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால், விஜய் படத்தின் படப்பிடிப்பு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று நடைபெற்றது. இதன் காரணமாக தயாரிப்பாளர்களும்  நடிகர்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, விக்டோரியா ஹாலில் நடைபெற்றுவந்த இதன் படப்பிடிப்பு நேற்று (மார்ச் 22) சென்னை, சென்ட்ரல் பகுதிகளில் நடைபெற்றது. இந்த தகவலை அறிந்த விஜய்  ரசிகர்கள் அங்கு கோட்டம் கூட்டமாக அங்கு கூடிவிட்டதால் ரசிகர்களின் இந்த வருகையை கண்ட விஜய் படப்பிடிப்புக்கு மத்தியில் ரசிகர்களைச் சந்தித்து தனது அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அது சம்பந்தமான புகைப்படங்களும் வீடியோவும்வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.