இளையதளபதி விஜய் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 61' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சென்னை ஈசிஆர் சாலையில் பனையூர் என்ற பகுதியில் உள்ள 'விஜய் மக்கள் இயக்கம்' தலைமை அலுவலகத்தில் விஜய், சற்று முன்னர் தனது ரசிகர்களை சந்தித்தார். 

இன்றைய இந்த சந்திப்பில் விஜய், தனது ரசிகர்களுடன் போட்டோஷூட்டில் கலந்து கொண்டதாகவும், ஒருசில ரசிகர்களிடம் அன்புடன் நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

விஜய் இன்றைய ரசிகர்கள் சந்திப்பின்போது வேஷ்டி சட்டை காஸ்ட்யூமில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய்யை நேரில் சந்தித்து போட்டோ எடுத்து கொண்ட அவரது ரசிகர்கள் அந்த போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.