லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, சாந்தனு, கெளரி கிஷன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விஜய் கன்னத்தில் விஜய்சேதுபதி முத்தம் கொடுக்கும் விதமாக வெளியான புகைப்படம் தாறுமாறு வைரலானது. 

 

இதையும் படிங்க: அம்மனாக தரிசனம் தந்து பரவசப்படுத்திய நயன்தாரா... பட்டையைக் கிளம்பும் “மூக்குத்தி அம்மன்” செகண்ட் லுக்...!

ஏப்ரல் 9ம் தேதி படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த படத்தில் இருந்து அனிருத் இசையில் வெளியான ஒரு குட்டி ஸ்டோரி பாடல் பட்டி, தொட்டி எல்லாம் ஹிட்டானது. இந்நிலையில் இரண்டாவது பாடலை வெளியிடுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அந்த படத்தில் பணியாற்றிய இசைக்கலைஞர் கெபா ஜெரேமியா என்பவர் தெரிவித்துள்ளார். 

இதற்கு எல்லாம் முன்னதாக பிகில் படத்திற்கு அதிக சம்பளம் வாங்கிய விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நெய்வேலியில் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்த விஜய்யை, அங்கேயே சென்று ஐ.டி. அதிகாரிகள் தூக்கி வந்தது எல்லாம் தனிக்கதை. 

இதனால் அதிக கொதிநிலையில் இருந்த மாஸ்டர் பட ஆடியோ லாஞ்சை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏன்னா?? அப்போ தானே விஜய் குட்டி கதை சொல்வார். அதில் ஐ.டி.ரெய்டுக்கு பின்னால் உள்ள அரசியல் பற்றி சொல்லி சம்மந்தப்பட்டவர்களை கதறடிப்பார் என்று காத்திருந்தனர். 

ஆனால் ரசிகர்கள் ஆசையில் மண்ணை போடும் விதமாக புது தகவல் ஒன்று கசிந்துள்ளது. வரும் 15ம் தேதி படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விழாவை நட்சத்திர ஓட்டலில் நடத்த படக்குழு தீர்மானித்துள்ளதாம். ஒரு வேலை நட்சத்திர ஓட்டலில் நடந்தால், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொள்ள முடியுமாம். ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்ற தகவல் கசிந்துள்ளது. 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

இதற்கு முன்னதாக சர்கார், மெர்சல், பிகில், தெறி உள்ளிட்ட படங்களின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் மாஸ்டர் பட ஷூட்டிங்கின் போது நடந்த ஐ.டி.ரெய்டு மற்றும் பாஜகவினரின் போராட்டம் விஜய் மற்றும் படக்குழுவினரை கலக்கத்தில் ஆழ்த்திவிட்டதால் தான் இந்த முடிவை எடுக்க ஆலோசிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.