''பிகில்'' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ''மாஸ்டர்''. கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் ஆண்ட்ரியா, கவுரி கிஷன்,வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, சஞ்சீவ், சேத்தன், ப்ரேம், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி, உட்பட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: பெரியார் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால்... ரஜினிக்கு மிரட்டல் விடுத்த கோவை ராமகிருஷ்ணன்....!

இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். சென்னை, டெல்லி, கர்நாடகா என 4 கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 5ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் விஜய் சேதுபதி சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் விஜய் சேதுபதியின் ஷூட்டிங் காட்சிகள் கூட சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது. விரைவில் விஜய் - விஜய் சேதுபதி நடிக்க உள்ள மாஸ் பைட் சீன் ஷூட் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: ஹீரோக்களுக்கு நிகராக ஆக்‌ஷன் குயின்களாக மாறும் ஹீரோயின்கள்... அதிரடி சண்டை காட்சிகளில் சும்மா தெறிக்கவிடுறாங்களாம்...!

தற்போது "மாஸ்டர்" ஷூட்டிங் ஸ்பார்டில் தளபதி விஜய்யுடன், மாளவிகா மோகனன் பேசிக்கொண்டிருப்பது போன்ற போட்டோ சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவிக்கிறது. மாஸ்டர் அப்டேட் கேட்டு காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்த போட்டோ செம்ம ட்ரீட்டா அமைத்திருக்கு.