- Home
- Cinema
- டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
Kamrudin VJ Parvathy Aurora Sinclair Love Romance : பிக் பாஸ் போட்டியாளராக இருந்து வரும் கம்ருதீன். பாரு மற்றும் அரோரா ஆகியோர் காதலில் விழுந்தனர் இதில் கம்ருதீன் மட்டும் டபுள் கேம் ஆடுகிறார்.

கம்ரூதீன் அரோரா விஜே பார்வதி காதல்
பிக் பாஸ் போட்டியாளராக இருந்து வரும் கம்ருதீன். பாரு மற்றும் அரோரா ஆகியோர் காதலில் விழுந்தனர் இதில் கம்ருதீன் மட்டும் டபுள் கேம் ஆடுகிறார். ஒரே நேரத்தில் இருவருடன் சேட்டையில் ஈடுபட்டு வருகிறார். இவர்கள் செய்யும் செய்கையை நெட்டிசன்கள் பெரும் விமர்சனத்தை செய்து வருகின்றனர். தற்போது பிக் பாஸ் மிகவும் சூடு பிடித்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாகவே நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சண்டைகளும், வாக்குவாதங்களும் நிறைந்த வாரமாகவே இந்த வாரம் இருந்து வருகிறது. சண்டை போட்டாலும் டாஸ்கை சரியாக செய்யாவிட்டாலும் இவர்களின் காதல் இந்த வீட்டில் ஒரு கலவரமாகவே இருந்து வருகிறது.
விஜே பார்வதி கம்ருதீன் காதல்
தற்போது ஒரே ஒரு காதல் ஜோடியாக கம்ருதீன் பாரு மற்றும் அரோரா இருந்து வருகின்றனர். இந்த வீட்டில் தற்போது இது இவர்கள் மட்டுமே காதல் ஜோடியாக இருக்கின்றன முதலில் இருந்த காதல் ஜோடி அனைவரும் பிரேக் அப் செய்து விட்டனர் என்ற நிலைமையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரு கம்ருதினினை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். தற்போது பாரும் மற்றும் கம்ருதீன் இருவருமே காதல் ஜோடியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர் அதனை பிடிக்காமல் அரோரா அவ்வப்போது பாருவிடம் சண்டை போடுகிறார்.
பார்வதி மற்றும் கம்ருதீன்:
இந்த பிக் பாஸ் வீட்டில் பார் மற்றும் கம்ருதீன் சேட்டை மிகவும் அதிகமாக உள்ளது அதாவது நெக்லஸை எடுக்கும் டாஸ்க் இருவரும் சேர்ந்து இரவில் கைகளை அமுக்கி விடுதல் கால்களை அமுக்கி விடுதல் போன்ற செய்கைகளை ஆபாசமாகவே அந்த செய்தியை இருந்ததாக நெட்டிசன்கள் இதனை விமர்சத்தும் ட்ரோல் செய்தும் வருகின்றனர். தற்போது பாரு கம்ருதீனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இந்த வீட்டில் இருந்து வருகின்றனர். பார்வை யாரும் கேள்வி கேட்டாலும் அதற்கு கம்ருதீனே வந்து பதில் கூறுகிறார்.
கம்ரூதீன், விஜே பார்வதி, அரோரா சின்க்ளேர்
இவருக்கா அவர் மிகவும் சப்போர்ட்டாகவே தற்போது இந்த வீட்டில் இருந்து வருகிறார். இதில் இவர்கள் செய்யும் சேட்டை ஒரு அளவில்லாமல் இருக்கிறது. பிக் பாஸ் மைக்கில் பேட்டரிகளை கழட்டிவிட்டு இருவரும் ரகசியாக காதல் மயக்கத்தில் இருக்கின்றனர். இதனால் பிக் பாஸ் கோபம் அடைந்து இருவரையும் திட்டினார். இரவு நேரங்களில் இருவரும் ஒன்றாகவே அமர்ந்து ஒன்றாகவே பேசுகின்றனர். நீங்கள் செய்யும் இப்படிப்பட்ட வேலைக்கு பிக்பாஸும் ரசிகர்களும் மிகவும் கோபமடைந்து இருக்கிறார்கள்.
அரோரா கம்ருதீன்:
முதலில் இந்த வீட்டில் வலம் வந்த காதல் ஜோடி கம்ருதீன் மற்றும் அரோரா ஆனால் அரோரா துஷார் பக்கமே இருந்தார் அவர் வீட்டை விட்டு சென்ற நிலையில் கம்முனுதீன் பக்கம் வந்தார் அரோரா. தற்போது அரோராவிடமிருந்து விலகும் கம்ருதீன் பாரு பக்கம் சென்ற நிலையில் அரோராவுக்கு கமருதின் மீது மிகுந்த கோபம் அடைந்தார். "எப்ப பார்த்தாலும் பார்வதிக்கிட்டயுமே பேசிக்கிட்டே இருக்க என்கிட்ட பேசவே மாட்டேங்குற" என்றெல்லாம் கூறினார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9
அதனால் அப்பப்போ பார்வதியால் அரோராவுக்கும் கம்ருதீனுக்கும் காதல் சண்டை ஏற்பட்டு வருகிறது. தற்போது அரோராவை ஏற்றி விடும் ஆதிரை. கல்யாணம் செய்யப் போகிறாயா? ஏன் அவர்கூடையே இருக்கிறாய் என்றெல்லாம் கேட்கிறார் ஆதிரை. என்பதை அரோரா கம்ருதீனிடம் கூற கம்ருதீன் கோபமடைந்து யார் இந்த ஆதிரை அவரெல்லாம் சொல்வதை எல்லாம் நீ ஏன் கேட்கிறாய் என்று எல்லாம் ஆரோராவை கோபமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார் கம்ருதீன்.
பார்வதி மற்றும் அரோரா:
அரோராவும் பார்வதிக்கிடையே மிகவும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அரோரா" ஊர் வாயை மூடலாம் ஆனால் பார்வையை மூட முடியாது" என்று நக்கலாக கூறியிருப்பார். கம்ருதீன் எனக்கு தான் வேண்டும் என்பதற்காக இருவரும் சரமாரியாக சண்டை போட்டுக் கொள்கின்றனர். தற்போது அரோரா பார்வதியை சாடை சாடையாக கேட்கிறார் என்றெல்லாம் இப்போது கூறுகிறார் எப்போதும் பேசாத அரோராய் இந்த இரண்டு வாரமாக மிகவும் அதிகமாக பேசுகிறார் என்னும் விமர்சனத்தை இப்போது வாங்கி வருகிறார். அது யாருக்காக என்றால் கமிருதனுக்காகவே என்னும் விமர்சனத்தை அரோரா இந்த வாரம் பெற்றார்.
பிக் பாஸ் தமிழ்
இந்த வார இறுதியில் கப்ருதீன் பார்வதி இருவருமே காதலித்து வருகின்றனர் அதைப் பிடிக்காமல் அரோரா இவர்களை அவ்வப்போது சண்டையிட்டு வருகிறார் என்பதை தெளிவாக தெரிய வருகிறது அடுத்த வாரத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.