பொங்கல் விருந்தாக திரைக்கு வந்த பட்டாஸ் படத்தில் பழங்கால தமிழகர்களின் தற்காப்பு கலையான அடிமுறை பயிற்சியை முறைப்படி பயின்ற சினேகா, ஆக்‌ஷன் காட்சிகளில் வில்லன்களை விளாசித் தள்ளி இருந்தார். பட்டாஸ் படத்திற்காக சினேகா எப்படி அடிமுறை பயிற்சி பெற்றார் என்ற வீடியோவும் இன்று வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

அதேபோல் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனனும் ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பியிருக்கிறாராம். குறிப்பாக படத்தின் வில்லனான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன் அனல் பறக்க மோதும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் அமலா பால் க்ராவ் மகா என்ற சண்டை பயிற்சியை முறைப்படி பயின்று, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைத்துள்ளாராம். மேலும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல், மிகவும் ரிஸ்க்கான ஷாட்களை கூட உயிரை பயணம் வைத்து அமலா பால் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழில் சினிமாவில் ஹீரோயின் என்றாலே 4 பாட்டுக்கு நடனம், லூசு மாதிரி ஹீரோ பின்னாடி சுத்துறது, அரைகுறை டிரஸில் கவர்ச்சி காட்டுறது என்ற காலம் எல்லாம் மலையேறி கதையை சரியாக தேர்வு செய்துவருகின்றனர். இந்த சமயத்தில் ஹாலிவுட் படங்களைப் போல ஹீரோக்களுக்கு நிகராக ஹீரோயின்களும் ஆக்‌ஷன் குயின் அவதாரம் எடுப்பது நல்ல மாற்றத்தை காட்டுகிறது.