தயாரிப்பாளர் மகளை தவிக்க விட்ட தளபதி:    பிகிலேஏஏஏஏஏ!

*    கலைஞானி, உலக நாயகன், காதல் இளவரசன் கமல் ஹாசனின் மகளான ஸ்ருதியுடன் இணைந்து நடிக்கும் தமிழ் ஹீரோக்கள், காதல் காட்சிகளில் சற்றே தயங்குவார்கள். ஆனால் நம்ம சங்கத்தமிழனான விஜய் சேதுபதிக்கு அப்படியில்லையாம். இருவரும் இணைந்து நடிக்கும் ‘லாபம்’ ஷூட்டிங்கில் ஸ்ருதியுடன் செம்ம கேஷூவலாக இருக்கிறாராம் வி.சே!

*    சென்னையில் ஷூட்டிங் இருந்தால் ஹேப்பியாகிடுவார் விஜய். சொந்த மண், சொந்த ஊர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு! என பல காரணங்கள். ஆனால் சமீபத்தில் சென்னையில் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நள்ளிரவில் நடந்த ஷூட்டிங்கின்போது ரசிகர்கள் ஓவராய் இன்ப தொல்லை தந்தது மனுஷனை கடுப்பாக்கிவிட்டது. 

*    பிகில் சக்ஸஸ் மீட் வைக்க ஆசைப்பட்டதாம் தயாரிப்பு தரப்பான ஏ.ஜி.எஸ். கல்பாத்தி மகளான அர்ச்சனா! விஜய்யை கூப்பிட்டபோது ‘நான் வர்ல. நீங்க நடத்துறத பத்தி எனக்கு பிரச்னை இல்லை’ என்று ஒதுங்கிக் கொண்டாராம். தவித்துவிட்டாராம் அர்ச்சு. ஏற்கனவே இயக்குநர் அட்லீ மீது செம்ம காண்டில் இருப்பதால் அவரையும் அழைக்கவில்லை. ஆக சக்ஸஸ் மீட் நினைப்பை ஒத்தி வைத்துவிட்டனர். 

*    சூர்யாவுக்கு பாவம் அடி மேல் அடி. கட்டாய வெற்றியை காட்ட வேண்டிய நிலையில், விஸ்வாசம் ஹிட் கொடுத்த சிறுத்தை சிவாவை அணுகினார். அவரோ வருவது போல் வந்து ரஜினியிடம் ஓடிவிட்டார். அடுத்து கைதி ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜிடம் கேட்டார். அவரும் வருவது போல் வந்து விஜய், விஜய் சேதுபதி படத்துக்கு பிறகு கமல்ஹாசனை வைத்து படம் பண்ணப்போகிறார். அதன் பிறகே சூர்யாவிடம் வருவாராம். என்ன பாவமோ சூர்யாவை இப்படி போட்டு ஆட்டுது. 

*    அசுரன் படத்துக்காக தனக்கு வந்து சேரும் தாறுமாறான வாழ்த்துக்களை பெற வழியில்லாமல் கிட்டத்தட்ட எழுபது நாட்கள் லண்டனில் தன் புது படத்துக்காக ஒட்டுமொத்தமாக கால்சீட் கொடுத்து, நடித்து முடித்தும் விட்டார் தனுஷ். இயக்கம் கார்த்திக் சுப்புராஜ். 
ஷூட் முடித்து பூசணிக்காய் உடைத்துவிட்டனர். 
-    விஷ்ணுப்ரியா