இந்த ஆண்டு தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு அட்டகாசமான ட்ரீட் இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'சர்கார்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. அரசியலை மையமாக கொண்ட கதைக்கருவை கொண்ட இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் அளவிலான எதிர்பார்ப்பு இருக்கிறது.

 சமீபகாலமாக தமிழில் அரசியல் மற்றும் சமுதாய அக்கறை கொண்ட படங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. கடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ரிலீசான மெர்சல் திரைப்படம் கூட அந்த வகையை சேந்தது தான். கத்தி, துப்பாக்கி என தளபதியின் படங்கள் இப்போதெல்லாம் சமுதாய அக்கறை கொண்ட கதைக்களத்துடனே அமைகிறது.

அதிலும் சமீபத்திய தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்த காட்சிகள் வேறு சர்காரின் இடம் பெற்றிருக்கிறது என்றும் கூறப்படிகிறது. இதனால் விஜயின் அரசியல் ஈடுபாடு மீது இப்போது அனைவரின் கவனமும் திரும்பி இருக்கிறது. பிரம்மாண்டமான ரசிகர் கூட்டணியை கொண்டிருக்கும் அவரின் அரசியல் வரவு ரசிகர்களுக்கு விருப்பமானது தான் இருந்தாலும் இதுவரை அரசியல் குறித்து விஜய் இதுவரை எந்த கருத்தும் தெரிவித்ததில்லை.

அதே சமயம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய ரசிகர் மன்றத்திற்கான கொடி ஒன்றை விஜய் அறிமுகம் செய்திருந்தார். அப்போது அவர் அரசியலுக்கு வருவதற்காக தான் இந்த கொடியை அறிமுகம் செய்திருக்கிறார். கட்சி குறித்து ரகசிய செயல்பாடுதான் இது என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் அதற்கு சமீபத்தில் காரணம் கூறி அசத்தி இருக்கிறார் விஜய்.

அந்த கொடி என் ரசிகர்களுக்கான கொடி. என்னுடைய ரசிகர்கள் பல நற்செயல்களை ரசிகர் மன்றத்தின் பெயரில் செய்துவருகின்றனர். அவர்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் அங்கீகாரம் வேண்டும் அதனால் தான் அவர்களின் விருப்பத்தின் பெயரில் இந்த கொடியை அறிமுகம் செய்தேன். வேறு எந்த காரணமோ, நோக்கமோ, இதன் பின்னணியில் இல்லை என கூறி இருக்கிறார் விஜய்.