இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள 'பைரவா' படத்தை கொண்டாட கார்த்திருக்கின்றனர்.

பைரவா படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் இசையில் மட்டும் இல்லாமல் இப்போது நடிப்பிலும் உயர்ந்து வரும் விஜய்யின் தீவிர ரசிகரான ஜி.வி.பிரகாஷின் புருஸ்லீ படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர். 

முதலில் இதை கேள்வி பட்ட ஜி.வி.பிரகாஷ், விஜய்யுடன் என் படத்தை ரிலிஸ் செய்வதா? என மறுத்துவிட்டாராம்.

பிறகு படக்குழு ஒரு வாரம் விடுமுறை விடப்படுவதால் , இந்த நேரத்தில் படத்தை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என கோரிக்கை வைத்ததாம்.

இதன் காரணமாக ஜிவியும் ஒத்துக்கொண்டாராம், இது பற்றி முதல் ஆளாக விஜய்யை சந்தித்து ‘அண்ணா மன்னிச்சுருங்க, உங்கள் படத்தோடு என்னுடைய படமும் வெளியிட படக்குழு முடிவு எடுத்திருக்கிறார்கள்’என்று கூறினாராம்.

இதை கேட்ட விஜய் ‘அட இதில் என்ன இருக்கின்றது, எனக்கு எந்த தயக்கமும் இல்லை’ என கூறி ஜி.வி.பிரகாஷ் மனதை தேறி அனுப்பியுள்ளார் .