Vijay Keerthi is a trend in Twitter

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழக அரசியலை தாறுமாறாக கிழிக்க வரும் “தளபதி 62” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் விவசாயம் என தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை தாறுமாறாக அலசியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய் நாயகியாக கீர்த்தி நடித்து வருகிறார். அரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது. ஷோபாவில் உட்கார்ந்திருக்கும் கீர்த்தி, தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பாக நடந்துவரும் படப்பிடிப்பை ஜூலை மாத இறுதிக்குள் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.