கோலிவுட் திரையுலகில் புதிதாக பல ஹீரோக்கள் என்ட்ரி கொடுத்தாலும், அஜித், விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் இடத்தையோ... அவர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையோ பெறுவது அவ்வளவு எளிதல்ல. 

ஏன் தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவர்களாக இருந்து வரும்  சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி போன்ற நடிகர்களுக்கு கூட, ரஜினி, விஜய், அஜித் ஆகியோருக்கு இருக்கும் ரசிகர்களை விட குறைவாக தான் ரசிகர்கள் உள்ளனர். 

இந்நிலையில் இந்த வருடம் அதாவது 2018-ம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது. 

இதில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ் நடிகர் என்கிற கௌரவத்தை பெற்றுள்ளார் நடிகர் விஜய். அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.

மேலும் இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் ராகுலும் உள்ளனர். தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 6 ஆவது இடத்திலும், 7 ஆவது இடத்தில் ஷாருக் கானும், 8ஆவது இடத்தில் விஜய்யும் உள்ளனர். 

ரஜினி, அஜித், போன்ற தமிழ் பிரபலங்களுக்கு கிடைக்காத கெளரவம் விஜய்க்கு கிடைத்துள்ளதை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.