Vijay is coming with the magician to catch children
விஜய் 61 படத்தில் குழந்தைகளை கவர மந்திரவாதி கதாபாத்திரத்தில் விஜய் நடித்து வருகிறாராம்.
அட்லீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தில், விஜய் மூன்று வேடங்களில் நடிப்பது ஏற்கனவே உறுதியானது.
இந்த நிலையில் இந்த மூன்று கதாபாத்திரங்களில் ஒன்றில், சீக்கியர் வேடத்தில் விஜய் நடிப்பதாக தகவல்கள் கசிந்தன. ஆனால், அது தவறு என்று படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் விஜய் 61 படத்தில் பஞ்சாயத்து தலைவர், மருத்துவர் மற்றும் மந்திரவாதி ஆகிய மூன்று வேடங்களில் விஜய் நடித்து வருவதாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதில் மந்திரவாதி தொடர்பான காட்சிகள், முழுக்க நகைச்சுவை அம்சங்களுடன், குழந்தைகளை கவரும் வகையிலும் உருவாக்கப்பட உள்ளதாம்.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியான முறுக்கு மீசை வைத்த விஜய் கெட் அப், பஞ்சாயத்து தலைவர் வேடத்திற்கானது என தெரியவந்துள்ளது.
இந்த கதாபாத்திரத்திற்குதான் நித்யா மேனன் ஜோடியாக நடிக்க உள்ளார்.
இந்நிலையில் விஜய் 61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விஜய் பிறந்தநாளான மே 22-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
