பிரான்ஸ் நாட்டில் வெளியாகும் தமிழ் படங்களின் வசூல் மற்றும் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து வெளியிடும் நிறுவனம் ஒன்று, அந்நாட்டில் மற்ற தமிழ் நடிகர்கள் படங்களை விட, தளபதிக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவருடைய படத்தைதான் பல பார்வையாளர்கள் பார்த்துள்ளதாக தகவலை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்தியுள்ளது. 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய திரைப்படங்கள், தற்போது வரை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் பிரான்ஸ் நாட்டில் வெளியாகி அங்குள்ள ரசிகர்களால் பார்க்கப்பட்டு வந்தாலும்,  கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான 'சர்கார்' படம் மீண்டும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்பட்டுள்ளது. 

படம் வெளியாகி மூன்றே மாதங்கள் சென்ற பின்பும் 'சர்கார்' படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது.  

இந்த தகவலை தமிழ்ப் படங்களின் வெற்றி, தோல்வி, வசூல் குறித்து  வெளியிடும் EOY என்டேர்டைன்மெண்ட் என்கிற நிறுவனம் தனது சமூக வலைத்தல பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

மேலும் பிரான்ஸ் நாட்டை பொருத்தவரையில், தமிழ்ப்படங்களில் விஜய் படங்களுக்கு மட்டுமே அதிக பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும், தெறி படத்திற்கு 24,827 பார்வையாளர்களும் மெர்சல் படத்திற்கு 32,471 பார்வையாளர்களும், சர்கார் பார்வையாளர்களும் 25,378 பார்வையாளர்களும் வந்திருந்ததாகவும், கூறியுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.