Vijay give treat to mersal team

தளபதி விஜய் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்த போது எடுத்த புகைப்படம் ஒன்று வலைதளங்களில் உலாவுகிறது.

அட்லீ இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த மெர்சல் படத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் அசத்தியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று அரசியல் ரீதியாக எதிர்ப்புகள் கிளம்பியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படி பல தடைகளையும் தாண்டி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரூ.130 கோடி செலவில் உருவாகிய இப்படம் தற்போது வரை ரூ.210 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதால், வசூல் மேலும் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்ல மெர்சல் வெளியான 12 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை தொட்டிருக்கும் ‘மெர்சல்’ விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன் பட வசூலை ஓரம்கட்டிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. எந்திரன் வெளியாகி 100 நாட்கள் ஓடிய பிறகே வசூலித்த ரூ.280 கோடி வசூலை மெர்சல் இன்னும் சில நாட்களிலேயே எடுத்துவிடுமாம்.

இந்நிலையில் திரையில் வசூல் வேட்டையை நிகழ்த்திவரும் ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான "அதிரிந்தி" விரைவில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், நடிகர் விஜய் ‘மெர்சல்’ படக்குழுவினருக்கு விருந்து ஒன்றை கொடுத்த போது எடுத்த புகைப்படம் ஒன்று வலைதளங்களில் உலாவுகிறது. சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள விஜய் வீட்டில் நடைபெற்ற இந்த விருந்தில், இயக்குனர் அட்லி, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹஹ்மான், வில்லன் எஸ்.ஜே.சூர்யா, எடிட்டர் ரூபன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.