தல அஜித்தின் சூப்பர் ஹிட் வெற்றி படங்களில் ஒன்றான 'மங்காத்தா' படத்திற்கு தளபதி விஜய் விருந்து கொடுத்த தகவலை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாநிதி அழகிரியின் தயாரிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் 'மங்காத்தா'. திரிஷா, அர்ஜுன், ஆன்ட்ரியா, அஞ்சலி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு இப்போது வரை அஜித்தின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் யூடியூபில் உரையாடிய வெங்கட் பிரபு, அவர் கேட்ட பல கேவிகளுக்கு பளீச் என பதில்கொடுத்துள்ளார். 

அந்த வகையில் விஜய் குறித்து கேள்வியெழுப்பிய போது பேசிய அவர், சிவகாசி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்ததால், அவருடன் நல்ல நட்பு எனக்கு இருந்தது. நான் இயக்கிய மங்காத்தா படத்தை பார்த்து விட்டு, தன்னை பாராட்டியது மட்டும் இன்றி, வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்தார்.

அப்போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து பார்க்கலாம் என கூறினார். விஜய் தற்போது வித்தியாசமான கதைகளில் நடிக்கிறார். கமர்ஷியல் கோணத்தில் புதிதாகச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்.  அவருக்கு ஏற்ற போல் ஒரு கதையை தயார் செய்து, விரைவில் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார் வெங்கட் பிரபு.