vijay give the surprice gift for santhoshnarayanan

தமிழ் சினிமாவில், முன்னணி ஹீரோக்கள் நடிக்கும், திரைப்படங்களுக்கு இசையமைத்து வருபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். மிக குறுகிய, காலத்திலேயே தன்னுடைய வித்தியாசமான இசையால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.

விரைவில் இவர் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் இவர் நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதத்தில் இளைய தளபதி விஜய்... ஒரு கிரிக்கெட் பேட் பரிசளித்துள்ளார். அதில் "SANA happy birthday நண்பா பிரியமுடன் விஜய்' என்று அவரே கையெழுத்து போட்டுள்ளார்.

விஜயிடம் இருந்து இப்படி ஒரு பரிசை சற்றும் எதிர்பாராத சந்தோஷ் நாராயணன். இதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, "இது தன்னக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், இந்த தருணத்தை தன்னால் மறக்க முடியாது என்றும் கூறி விஜய்க்கு நன்றி அண்ணா என ட்விட் போட்டு, விஜய் கொடுத்த பரிசுடன் தன்னுடைய புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

Scroll to load tweet…