vijay first look poster release name is sarkar

தளபதி விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று சரியாக 6 மணிக்கு விஜய் 62 படத்தின் 'சர்கார்' என்றும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இந்த தகவலை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கும் வேளையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

விஜய் பிறந்தநாள்:

தளபதி விஜய்க்கு தமிழ் திரையுலகில் எந்த அளவிற்கு தீவிர ரசிகர்கள் உள்ளார்களோ, அதே அளவிற்கு மலையாள திரையுலகிலும் தீவிர ரசிகர்கள் உள்ளனர். 

இந்த வருடம் தூதுக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுதியதால், பிறந்த நாளை பிரமாண்டாமாக கொண்டாட வேண்டாம் என விஜய் ரசிகர்களுக்கு ஏற்கனவே வேண்டுகோள் விடுத்திருந்தாலும், ரசிகர்கள் நாளை விஜயின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

விஜயின் சர்கார்:

இந்நிலையில் விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்களை குஷி படுத்தும் விதத்தில் விஜயின் 62 படத்தின் பெயர் 'சர்கார்' என்று வெளியாகியுள்ளது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் விஜய் மாஸ்ஸாக உள்ளார். 

விஜயின் ஆஸ்த்தான இயக்குனர், ஏ.ஆர்.முருகதாஸ் 'தலைவா' மற்றும் 'துப்பாக்கி' படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயை இந்த படத்தை இயக்கி வருவதால், இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகவே உள்ளது. 

இந்த படத்தில், விஜய் விவசாயிகளுக்காக போராடும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்பட்டது. இதனால் விவசாயத்தை மையப்படுத்திய பல தலைப்புகள் வெளியாகி ரசிகர்களை குழப்பி வந்தது. தற்போது படத்தின் பெயர் 'சர்கார்' என வெளியாகியுள்ளதால் ரசிகர்களுக்கு தெரிவாகியுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக்:

'சர்கார்' படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சி வெளியிட்டது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில், இரண்டாவது முறையாக நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் 'நடிகையர் திலகம்' திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், இந்த படத்திலும் கீர்த்திக்கும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

வரவேற்ப்பு:

தற்போது வெளியாகியுள்ள 'சர்கார்' படத்தின் தலைப்பை ரசிகர்கள் பல #Thalapathy62FL #thalapathy62 #vijay62 #sarkar, உள்ளிட்ட ஹேஷ்டாக் பயன்படுத்தி சேர் செய்து வருகிறார்கள். 

இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகார பூர்வமாக் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Scroll to load tweet…